வடக்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய வளிமண்டலச் சுழற்சி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்!

0 1467

வடக்கு அந்தமான் கடற்பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய வளிமண்டல  சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, தெற்கு ஆந்திர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் வலுவிழந்து தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் நிலவுவதாகவும், இதன் காரணமாக அடுத்த 5 தினங்களுக்கு பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்பு இல்லை எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments