உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன் வீடு திரும்பினார்..!
உடல்நலக்குறைவால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன், குணமடைந்து வீடு திரும்பினார்.
லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற கமல்ஹாசன், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. எந்த வித பாதிப்பும் இல்லை என்பதால் கமல்ஹாசன் இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், ஓரிரு நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments