தென்காசி எம்எல்ஏ-வுக்கு சொந்தமான டிராக்டர் மோதி 4 வயது சிறுவன் உயிரிழப்பு - ஓட்டுநர் கைது!

0 1392

தென்காசி எம்எல்ஏ பழனி நாடார்க்கு சொந்தமான டிராக்டர் மோதி 4 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கீழ சுரண்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ராஜதுரை என்பவரது 4 வயது மகன் ராஜ முகன், நேற்று மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக மணல் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த டிராக்டர் வாகனம், சிறுவன் ராஜ முகன் மீது மோதியதில், டிராக்டரின் முன்பக்க டயர் மற்றும் இஞ்சின் டயர் ஏறி இறங்கியதில் ராஜ முகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

தகவலறிந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை  மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் டிராக்டரை பறிமுதல் செய்து உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments