காதலனின் கொடூர குணத்தை முன்கூட்டியே அறிந்து காவல்துறைக்குப் புகார் அளித்த ஷ்ரத்தா.!
ஆப்தாப் தன்னைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிக் கூறு போட்டுவிடுவான் என்ற அச்சத்துடன் கடந்த 2020ம் ஆண்டு காவல்துறைக்கு அளித்த புகாரில் ஷரத்தா வால்கர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் சேர்ந்து வாழும் காதலனின் கொடூர குணத்தை முன்கூட்டியே அறிந்து காவல்துறைக்குப் புகார் அளித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதனிடையே ஆப்தாப்புக்கு காய்ச்சல் ஏற்பட்டிருப்பதால் அவனுக்கு நடத்தப்பட இருந்த உண்மை கண்டறியும் பாலிகிராப் சோதனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக ஆப்தாபுக்கு பல்வேறு தொடக்க நிலை பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
Comments