கோவிட்க்கு பிறகு அம்மை பரவல் உலகளாவிய அச்சுறுத்தலாகப் பரவிக் கொண்டிருக்கிறது - உலக சுகாதார மையம் எச்சரிக்கை!
கோவிட் பாதிப்புக்குப் பிறகு அம்மை பரவல் உலகளாவிய அச்சுறுத்தலாகப் பரவிக் கொண்டிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தியாவின் மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் குழந்தைகளுக்கு தட்டம்மை வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அம்மை நோய் பரவுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் அம்மை நோயைத் தடுக்க சொட்டுமருந்து போடுவது நிறுத்தப்பட்டு விட்டதால் அதன் பாதிப்பு தெரிய வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 4 கோடி குழந்தைகளுக்கு தடுப்பு மருந்தைத் தவற விட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Comments