இந்திய எல்லைத் தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள்.. வீடியோ ஆதாரத்துடன் இலங்கை கடற்படையினர் புகார்!

0 1398

எல்லைத் தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து, ராமேஸ்வரம் மீன்பிடி விசைப்படகுகள் மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் வீடியோ ஆதாரத்துடன் ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளனர்.

வங்கடலில் நிலவிய சுழல்காற்றின் வேகம் குறைந்ததால், 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி, தங்களது நாட்டு கடல் வளத்தை அழித்ததாக, 30-க்கும் மேற்பட்ட ராமேஸ்வரம் மீன்பிடி படகின் எண்ணுடன் வீடியோ எடுத்து, ஜி.பி.எஸ் ஆதாரத்துடன் இலங்கை கடற்படையினர் புகார் அளித்துள்ளனர்.

நடுக்கடலில் இந்திய - இலங்கை எல்லை தெரியாததால் தவறுதலாக அந்நாட்டு கடற்பரப்பிற்குள் நுழைந்துவிட்டதாக மீனவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments