பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு ரஷ்யா - ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவிப்பு
உக்ரைன் மீது போர் நடத்தி வரும் ரஷ்யா பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
சர்வதேச விதிமுறைகளைப் பின்பற்றாமல் உக்ரைனில் பொதுமக்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்புகள், மின் கட்டமைப்புகளை குறி வைத்து ரஷ்யப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன்றன.
அந்த வகையில், ரஷ்யாவிற்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு அளித்தயைடுத்து, ரஷ்யா பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு என அறிவிக்கப்பட்டது.
Comments