ஐ.எஸ். தீவிரவாதத்தை ஒடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு தேவை - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தல்!

0 1411

இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஐ.எஸ். தீவிரவாதத்தை ஒடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு தேவை என்று கம்போடியாவில் நடைபெற்ற 9வது ஆசியான் பாதுகாப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார். 

எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்றும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தீவிரவாதிகள் உலகம் முழுவதும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கிய போதும் கோவிட் பாதிப்புகளுக்குப் பின்னர் இதர பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதாக தெரிவித்த ராஜ்நாத்சிங், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி போன்ற பிரச்சினைகள் உலகின் கவனத்தைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

முரண்பாடுகளுக்கு சுதந்திரமான அமைதியான முறையில் தீர்வு காணும் பசிபிக் வர்த்தகத்தை இந்தியா ஆதரிப்பதாகவும் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments