4,500 முதலீட்டாளர்களிடம் ரூ.500 கோடி வரை ஹிஜாவு நிறுவனம் மோசடி - பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு
மாதம் 15% வட்டி தருவதாக கூறி 4 ஆயிரத்து 500 முதலீட்டாளர்களிடம் ஹிஜாவு நிறுவனம் சுமார் 500 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மலேசியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அந்நிறுவனத்தின் மோசடி தொடர்பாக அதன் இயக்குனரின் வீடு உள்பட 21 இடங்களில் சோதனையிட்டு முக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மோசடி தொடர்பாக புகார் அளிக்க விரும்புவோருக்கான மின்னஞ்சல் முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments