குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளி ஷரீக் மீதான பழைய வழக்கின் எஃப்.ஐ.ஆர்.-ஐ வெளியிட்ட என்.ஐ.ஏ.

0 1596

கடந்த செப்டம்பரில் கர்நாடகாவின் சிமோஹாவில் வெடிபொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பதுக்கி வைத்தது தொடர்பாக, குக்கர் குண்டுவெடிப்பு குற்றவாளி ஷரீக் மீது வழக்குப்பதிவு செய்ததாக, என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

ஷரீக் மீதான முந்தைய வழக்கின் முதல் தகவல் அறிக்கையை என்.ஐ.ஏ அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில், தேசியக் கொடியை எரித்தது தொடர்பாகவும், ஷரீக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் வழக்குப் பதிந்து ஷரீக்கை என்.ஐ.ஏ. தேடிவந்த நிலையில், மங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments