தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில் பாதி வழியிலேயே நின்றதால் தண்டவாளத்தில் நடந்து சென்ற பயணிகள்..!
சென்னை அடுத்த தாம்பரம் அருகே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், அவ்வழியே செல்லும் பிற ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.
தாம்பரத்தில் இருந்து பிற்பகலில் கடற்கரை ரயில் நிலையத்திற்கு புறப்பட்ட மின்சார ரயிலில், மின் கம்பியை இணைக்கும் கருவி உடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அந்த ரயில் நடுவழியில் நின்றதால் அவ்வழியே செல்லும் மற்ற ரயில்களும் அங்காங்கே நிறுத்தப்பட்டன. இதையடுத்து, ரயிலில் இருந்து இறங்கி, பயணிகள் தண்டவாளத்தில் நடந்து சென்றனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற சீரமைப்பு பணிகளுக்கு பின் ரயில் சேவை சீரானது.
Comments