சிறை சாப்பாட்டால் அமைச்சருக்கு 8 கிலோ எடை உயர்வு..!
திகார் சிறையில் இருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் 8 கிலோ எடை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு மசாஜ் செய்யப்படும் வீடியோ வெளியான நிலையில், சிறையில் அவருக்கு சரியான உணவு கிடைக்காததால் 28 கிலோ எடை குறைந்து விட்டதாக அவரது வழக்கறிஞர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அவர் சிறையில் விதவிதமாக சாப்பிடும் வீடியோ வெளியாகி உள்ளதோடு, சிறைக்கு வந்த பின்னர் அவர் 8 கிலோ எடை அதிகரித்திருப்பதாக சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Comments