அரசின் விளம்பர பேனரிலும், டாஸ்மாக் மதுபான விற்பனையிலும் முறைகேடு - இ.பி.எஸ்.
உள்ளாட்சிப் பணிகள் குறித்த பேனரை அச்சடிக்க, 350 ரூபாய்க்கு பதில் 7 ஆயிரத்து 900 செலவிடப்பட்டு முறைகேடு நடைபெறுவதாகவும், சட்டவிரோதமாக ஏராளமான மதுபான பார்கள் தமிழகத்தில் செயல்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 10 பக்க புகார் மனுவை அளித்தார்.
பின்னர் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, அரசு மருத்துவமனைகளில் ஆன்டிபயாடிக் போன்ற மருந்துகள் போதுமான அளவில் இல்லை என்றார்.
கோவை கார் வெடிப்பு, கனியாமூர் பள்ளியில் கலவரம் ஏற்பட்டது, போதைப்பொருள் பயன்பாடு என தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குறை கூறினார்.
Comments