மீண்டும், மீண்டுமா... சாலையோரம் இருந்த மின்கம்பத்தை அகற்றாமலேயே அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சாலையோரம் இருந்த மின்கம்பத்தை அகற்றாமலேயே, அதனோடு சேர்த்து கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
லப்பைப்பேட்டையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஒப்பந்ததாரரிடம் கால்வாய் அமைக்கும் பணிகள் வழங்கப்பட்ட நிலையில், கான்கிரீட் கழிவு நீர் கால்வாய் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.
மின்கம்பத்தினால் கழிவு நீர் கால்வாயில் மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்படக்கூடும் என்பதால், அதிகாரிகள் இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Comments