மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு - உதகையைச்சேர்ந்த நபர் விடுவிப்பு
மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட 60 மணி நேர விசாரணைக்கு பின், உதகையைச் சேர்ந்த சுரேந்தர் விடுவிக்கப்பட்டார்.
குக்கர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான முகமது ஷாரிக்கிற்கு, சிம் கார்டு வாங்க ஆதார் அட்டை வழங்கியதாக, 2 நாட்களுக்கு முன் சுரேந்தர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ரகசிய இடத்தில் வைத்து விசாரித்த பின் சுரேந்தரை விடுவித்த போலீசார், வெளியூருக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். விசாரணை முடியும் வரை செல்போன் தங்களிடமே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
உயர்மட்ட விசாரணைக்காக, ஓரிரு நாட்களில் மங்களூரில் ஆஜராக சுரேந்தருக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளதாகவும், ஷாரிக்கை நேரில் அடையாளம் காண்பித்து அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments