இந்தியாவில் அணுமின் நிலையங்களில் உள்ள அணு எரிபொருள் சுழற்சிக்கான புதிய தொழில்நுட்பங்களை வழங்கிய ரஷ்யா!
இந்தியாவில் அணுமின் நிலையங்களில் உள்ள அணு எரிபொருள் சுழற்சிக்கான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை ரஷ்யா வழங்கியுள்ளது.
ஐதராபாத்தில் நடைபெற்ற மாநாட்டின்போது, இந்த தொழில்நுட்பங்களை ரஷ்ய அதிகாரிகள் வெளியிட்டனர். இவைகள் கூடங்குளத்தில் தற்போது உள்ள அணு உலைகள் மற்றும் கட்டுமானத்தில் இருக்கும் அணு உலைகளின் செயல்திறனை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கூடங்குளத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட UTVS மாடலுக்குப் பதிலாக, மேம்பட்ட TVS-2M எரிபொருளை வழங்கத் தொடங்கியது. இது மின் உற்பத்தி நிலையத்தின் செயல்திறன் மற்றும் பொருளாதார செயல்திறனை மேம்படுத்துவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
Comments