ராணி மேரி கல்லூரி 104வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
சென்னை ராணி மேரி கல்லூரியின் 104வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் 2,702 மாணவிகள் இளங்கலை பட்டமும், 473 மாணவிகள் முதுநிலை பட்டமும், 84 மாணவிகள் ஆய்வியல் நிறைஞர் பட்டம்(எம்.பில்) பெற்றனர்.
பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தின் முதல் மகளிர் கல்லூரியான ராணி மேரி கல்லூரி, கடந்த 1915ம் ஆண்டு "கேப்பர் இல்லம்" என்ற பெயரில் இருந்த புகழ்பெற்ற கட்டிடத்தில் தொடங்கப்பட்டதாக கூறினார்.
இதுவரையில் லட்சக் கணக்கான பெண்கள் பட்டம் பெற்ற ராணி மேரி கல்லூரி, பெண் கல்வியின் கலங்கரை விளக்காக ஒளிவீசிக் கொண்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
Comments