குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் - முகமது ஷாரிக், ஈஷா மையத்தில் உள்ள சிலைக்கு குறி வைத்தாரா என்று போலிசுக்கு சந்தேகம்.!

0 3665

மங்களுர் குக்கர் குண்டு வெடிப்புக்கு காரணமான முகமது  ஷாரிக், கோயம்புத் தூரில் தங்கி இருந்த போது ஈஷா மையத்திற்கு சென்று வந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் தனது வாட்ஸ் அப் அடையாளத்தில்  ஈஷா மையத்தில் உள்ள சிலையை வைத்து இருந்துள்ளதும் போலிஸ் விசாரணையில் கண்டறியப் பட்டு உள்ளது.

இதனால் முகமது  ஷாரிக், ஈஷா மையத்தில் உள்ள சிலைக்கு குறி வைத்தாரா என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது.

மேலும் முகமது ஷரிக், கோவை சிங்கா நல்லூரில் சில மாதங்கள் முன்பு தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஜமீசா முபினை சந்தித்து இருக்கலாம் என்ற கூறப்பட்டது.

அவர்கள் இரண்டு பேரும் சந்திக்கவில்லை என்பது காவல்துறை வட்டாரத் தகவலாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments