"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
5 நாட்களுக்கு தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலைகொண்டுள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
மேலும், தமிழகம் - புதுச்சேரி கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தியுள்ளது.
Comments