ரூ.12,700 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்த பாக். ராணுவத் தளபதி குடும்பம் - வெளியான அறிக்கை

0 3390

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், கடந்த ஆறு ஆண்டுகளில் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான டேமேஜிங் அறிக்கையில், 6 ஆண்டுகளில் பஜ்வாவின் மனைவி ஆயிஷா அம்ஜத், மருமகள் சபீர் மற்றும் பிற நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களாகி, சர்வதேச வணிகத்தைத் தொடங்கி இஸ்லாமாபாத் மற்றும் கராச்சியில் பண்ணை வீடுகள், ரியல் எஸ்டேட், வெளிநாட்டு சொத்துக்களை வாங்கி அதிக பணம் சம்பாதித்ததாகவும், திரட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் வணிகங்களின் சந்தை மதிப்பு 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் அஹ்மத் நூரானி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments