ஆவடியில் செல்போனை சார்ஜரில் போட்ட படியே பேசிய போது மின்சாரம் தாக்கியதில் மத்திய அரசு ஊழியர் உயிரிழப்பு..!
சென்னையை அடுத்த ஆவடியில் செல்போனை சார்ஜரில் போட்ட படியே பேசிய போது மின்சாரம் தாக்கியதில் மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தார்.
கௌரிப்பேட்டையைச் சேர்ந்த பால்பாண்டி என்பவர் ஜே.பி எஸ்டேட் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாங்கிய அடுக்குமாடி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்த போது பால்பாண்டி முகம் கருகி அழுகிய நிலையில் கிடந்துள்ளார்.
மேலும் வீட்டினை ஆய்வு செய்கையில் போன் சார்ஜர் உள்ள நிலையில் கையில் செல்போனுடன் பால்பாண்டி இருந்தது தெரிய வந்தது.
Comments