சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் -நெல்லை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
நெல்லை மாநகராட்சிக்கு உள்பட்ட சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சாலையில் பிடிபடும் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களது ஆதார் அட்டை, உறுதிமொழி கடிதத்துடன் ஒரு வாரத்திற்குள் 10,000 ரூபாய் அபராதம் செலுத்தி கால்நடைகளை திரும்பிப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகள் பொது ஏலத்தில் விடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments