இந்திய செஞ்சிலுவை சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் சங்க நிர்வாகிகளின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை
இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழக கிளை நிர்வாகிகளுக்கு சொந்தமான 3 கோடியே 37 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, அமலாக்க அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
2011ஆம் ஆண்டில் இருந்து அந்த சங்கத்தில் பல முறைகேடுகள் நடந்ததாகவும், அதில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், அப்போதைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சார்பில் சிபிஐயிடம் புகாரளிக்கப்பட்டது.
இதனையடுத்து, செஞ்சிலுவை சங்க தமிழக நிர்வாகிகள் 6 பேர் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கினை அமலாக்க அதிகாரிகள் பதிவு செய்தனர்.
இந்நிலையில், சங்கத்தின் தமிழக தலைவர் ஹரிஷ் மேத்தா உள்ளிட்டோரின் சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments