காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் காற்றழுத்தத்தாழ்வு பகுதியாக நாளை வலுவிழக்கும் என கணிப்பு
சென்னையில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று நள்ளிரவு தெற்கு ஆந்திரா, வடதமிழகம்- புதுச்சேரி நோக்கி நகரக்கூடுமெனவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை காலை, தமிழகம்- புதுச்சேரி கடற்கரையை நெருங்கும்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments