சாலை விபத்தால் இடுப்பிற்கு கீழ் செயலிழந்த இளைஞர்.. மனு அளித்த சிலமணி நேரத்தில் வீடு ஒதுக்கிய கரூர் ஆட்சியர்..

0 3803
இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு அளித்த சில மணி நேரத்தில் கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு வீடு ஒதுக்கி அதற்கான ஆணையை அளித்துள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.

இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு அளித்த சில மணி நேரத்தில் கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி இளைஞருக்கு வீடு ஒதுக்கி அதற்கான ஆணையை அளித்துள்ளார் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.

எம்சிஏ பட்டதாரியான பிரகாஷ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தினால் முதுகுத்தண்டு பாதிப்படைந்து இடுப்பிற்கு கீழ் முழுமையாக செயலிழந்த நிலையில் உறவினர் வீட்டில் தாயுடன் தங்கியுள்ளார்.

இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் பிரகாஷ் தனது தாயுடன் வந்து மனு அளித்திருந்தார்.

8,68,000 ரூபாய் மதிப்புள்ள வீட்டிற்கு மத்திய, மாநில அரசுகளின் மானியம் போக மீதமுள்ள 1,18,000 ரூபாய் மாவட்ட ஆட்சியரின் விருப்ப உரிமை நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments