ஈரானில் ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்ட இரண்டு நடிகைகள் கைது..!
ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்ட நடிகைகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக அந்த நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
நடிகைகள் ஹெங்கமே காசியானி, காடாயூன் ரியாகி இரண்டு பேரும் ஹிஜாப் அணியாமல் வீடியோ பதிவிட்டது அந்த நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் செயல் என்பது போலிசின் புகார் ஆகும்.
இரண்டு நடிகைகளில் ஹெங்கமே காசியானி, ஹிஜாப் அணியாமல் வெளியிட்டு உள்ள இந்த பதிவுதான் தமது கடைசி பதிவாகக்கூட இருக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஈரானில் கடந்த செப்டம்பரில், தலையை மூடும் ஹிஜப்பை முறையாக அணியாத குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மாஷா அம்னி என்ற 22 வயது பெண் உயிரிழந்ததை அடுத்து போராட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Comments