"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இந்து முன்னணி நகர தலைவர் வீட்டின் முன் பெட்ரோல் பாட்டில் வீசப்பட்டதா, என போலீஸ் ஆய்வு
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இந்து முன்னணி நகர தலைவர் வீட்டின் முன் பெட்ரோல் பாட்டில் வீசப்பட்டதா, என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சக்கரபாணி வீட்டின் முன், அதிகாலை பயங்கர வெடி சத்தம் கேட்டதாகவும், வெளியில் வந்து பார்த்தபோது திரியுடன் பாட்டில்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் பெட்ரோல் பாட்டில் குண்டு வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சம்பவ நடந்த இடத்தில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப் பிரியா தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
Comments