சென்னையில் இருந்து 450 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!
சென்னையில் இருந்து 420 கிலோ மீட்டர் தொலைவில் வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் தெற்கு ஆந்திரா, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி நகரக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், இராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும், திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நாளை காலை வரை 45 முதல் 55 கிலோ மீட்டர் வரையிலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்று மீனவர்களை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Comments