இதுவரை சுமார் 25 லட்சம் இளைஞர்களை திமுகவில் சேர்த்துள்ளேன் - திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை சுமார் 25 லட்சம் இளைஞர்களை கட்சியில் தாம் சேர்த்துள்ளதாக அக்கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திமுகவில் இளைஞர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டார்.
பின்னர் பேசிய அவர், திமுக இளைஞரணியை பலப்படுத்துவோருக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றார்.
Comments