பீகாரில் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 15 பேர் உடல்நசுங்கி உயிரிழந்த பரிதாபம்.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல்!

0 3158

பீகார் மாநிலம் வைஷாலியில்  லாரி கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் இருந்தவர்கள் மீது மோதியதில்  குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 15 பேர் பலியாகினர்.

ஆன்மீக ஊர்வலத்தில் கலந்துக் கொண்ட பலர் சாலையோரம் மரத்தடியில்  இளைப்பாறிக் கொண்டிருந்த போது அவர்கள் மீது  லாரி மோதியது. விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

லாரி ஓட்டுனர் தப்பியோடி விட்டார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படுமென பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments