கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சையில் தவறில்லை - மா.சுப்பிரமணியன்..!

0 6705

கால்பந்து வீராங்கனை பிரியாவிற்கு மருத்துவர்கள் செய்த அறுவை சிகிச்சையில் தவறில்லை என்றும் அவருக்கு போடப்பட்ட கம்பிரசன் பேண்டை, குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவர்கள் அகற்றாமல் அலட்சியமாக இருந்ததாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், பிரியா விவகாரம் கொலை குற்றமா இல்லையா என்பதை, சட்டத்துறையும், காவல்துறையும் தான் முடிவு செய்யும் என்றார்.

மேலும், போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்த மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments