உக்ரைனுக்கு 60 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி அளிப்பதாக ரிஷி சுனக் அறிவிப்பு

0 3425

உக்ரைனுக்கு மேலும் 60 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக ரிஷி சுனக் அறிவித்தார்.

பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக ரிஷி சுனக் உக்ரைன் சென்றுள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ்வில், அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது உக்ரைனுக்கு மேலும் 60 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக ரிஷி சுனக் அறிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிஷி சுனக், "விடுதலைக்காக போரிடுவது என்றால் என்ன என்று இங்கிலாந்துக்கு நன்றாக தெரியும். உக்ரைன் மக்களின் துணிச்சல் இந்த உலகத்திற்கே பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments