ரஷ்ய அதிபர் புதினுக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை எனத் தகவல்.

0 3549

ரஷ்ய அதிபர் புதின் தொடர்பான சில செய்திகள் அவரது உடல் நலம் பற்றிய கவலையை எழுப்பி வருகின்றன.

அண்மையில் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தெற்கு பகுதி நகரமான கெர்சனில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. இது தொடர்பான அறிவிப்பை நவம்பர் 9ம் தேதி ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் உக்ரைனுக்கு எதிரான போரில் தலைமை வகிக்கும் ராணுவத் தளபதி ஆகியோர் ராணுவக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செய்தியாளர்களின் கேமராக்களில் தோன்றி அறிவித்தனர்.

அப்போது புதினை காணவில்லை. அவர் மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்றொரு நிகழ்ச்சியில் புதின் பேசிய போதும் கெர்சன் ராணுவ பின்வாங்கல் குறித்து குறிப்பிடவில்லை.புதினின் இந்த மௌனம் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments