'திட்டங்களை கிடப்பில்போடும் சகாப்தம் மறைந்தது' - பிரதமர் மோடி
தொடங்கும் திட்டங்களை காலம் தாழ்த்தி நிறைவேற்றுவது, முடிக்காமல் விடுவது ஆகியவற்றுக்கான சகாப்தம் மறைந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தின் இட்டா நகருக்கு அருகே 640 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
மேலும், 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்பட்ட 600 மெகா வாட் திறன் கொண்ட கமெங் நீர்மின் நிலையத்தையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்து, முதல் 70 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் 9 விமான நிலையங்கள் தான் கட்டப்பட்டதாகவும், கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் தமது அரசு, புதிதாக 7 விமான நிலையங்களை உருவாக்கியதாகவும் கூறினார்.
Comments