கூகுள் மேப் அப்டேட் செய்யப்படாததால் குரூப் ஒன் தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவி..!
கோவையில், ஒரே பெயரில் 2 பள்ளிகள் இருந்ததால் கூகுள் மேப் பார்த்துக் கொண்டு இடம் தெரியாமல் தவித்து ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, 5 நிமிடங்கள் தாமதமாக சென்ற இளம்பெண் குரூப் - 1 தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்ட்து.
பீளமேட்டில் நேஷனல் மாடல் என்ற பெயரிலேயே, மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன.
வடவள்ளியைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கு, மெட்ரிகுலேஷன் பள்ளி தேர்வு மையமாக போடப்பட்டிருந்த நிலையில், அவர் கூகுள் மேப் உதவியுடன், தவறுதலாக சிபிஎஸ்இ பள்ளிக்கு சென்றுள்ளார்.
பின்னர் தனக்கு போடப்பட்டது வேறு பள்ளி என்பதை அறிந்த ஐஸ்வர்யா, 5 நிமிடங்கள் தாமதமாக அந்த பள்ளிக்கு சென்றதால் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை.
2 பள்ளிகள் ஒரே பெயரில் இருந்ததால் ஏற்பட்ட குழப்பத்தால், 2019ம் ஆண்டு முதல் தேர்வுக்கு தயாராகி வந்த தன்னால், தேர்வெழுத முடியாமல் போய்விட்டதாக ஐஸ்வர்யா வேதனை தெரிவித்தார்.
இதே போல இருபதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தாமதமாக வந்ததால் தேர்வு எழுதாமல் திரும்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது
Comments