சிறார் பருவக் காதல் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவையே அன்றி குற்றச்செயல் இல்லை - உயர் நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ்

0 5450
சிறைக்கு செல்லும் இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பறவை திட்டம் குறித்து துணை மற்றும் உதவி ஆணையர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்து உயர் நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் உரையற்றினார்.

சிறைக்கு செல்லும் இளஞ்சிறார்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பறவை திட்டம் குறித்து துணை மற்றும் உதவி ஆணையர்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்து உயர் நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் உரையற்றினார்.

பேருந்து படிக்கட்டு பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுவதை குறிப்பிட்ட அவர், நீங்கள் யாரும் உங்கள் இளம் வயதில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தது இல்லையா? என கேள்வி எழுப்பினார்.

காதல் திருமண விவகாரங்களில் சிறார்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்வது அவர்களின் வாழ்க்கையை சீர்குலைத்து எதிர்காலத்தை பாழாக்கும் என்றவர், சிறார் பருவக் காதல் விவகாரங்கள் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவையே அன்றி குற்றச்செயல் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஸ்டைலாக முடித்திருத்திக் கொள்ளும் மாணவர்களை பிடிக்கிறீர்கள், ஏன் நீங்களெல்லாம் ரவிசந்திரன், எம்.ஜி.ஆர் போன்று ஹேர்ஸ்டைல் வைத்து கொண்டதில்லையா? எனவும் அந்த காலத்து நடிகர்கள் போல பெல் பாட்டம் பேண்ட் அணிந்து ஸ்டைல் காட்டியதில்லையா? எனவும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments