16 வயதில் சிறுமிக்கு குழந்தை திருமணம்.. கணவர் அடித்து துன்புறுத்தியதால் படுகாயங்களுடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதி

0 2904
மதுரையில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட 17வயது சிறுமி, கணவர் அடித்து துன்புறுத்தியதால் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட 17வயது சிறுமி, கணவர் அடித்து துன்புறுத்தியதால் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், விருதுநகரை சேர்ந்த 34 வயதான வெற்றிவேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

திருமணமான நாள் முதலே மது மற்றும் கஞ்சா போதையில் சிறுமியை, வெற்றிவேல் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெற்றிவேல் தாக்கியதில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

சிறுமி அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள வெற்றிவேலை தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments