பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் - சென்னையில் 4 பேரின் வீடுகளில் போலீசார் திடீர் சோதனை

0 2850

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சென்னையில் 4 பேரின் வீடுகளில் மாநகர போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

உள்துறை அமைச்சகம் அளித்த பட்டியலில், சென்னையில் 18 பேர் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் ஏற்கனவே இரண்டு முறை 8 இடங்களில் சோதனை நடத்திய போலீசார் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்நிலையில், சென்னையில் மூன்றாவது முறையாக ஓட்டேரி, வேப்பேரி, ஏழு கிணறு பகுதிகளில் 4 பேரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

இதே போல, திருச்சி இனாம்குளத்தூரில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக 2 பேரின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments