கால்பந்து வீராங்கனை மரணம் - தலைமறைவாக உள்ள மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கில், தலைமறைவான மருத்துவர்களை பிடிக்க கொளத்தூர் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பிரியாவுக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததாக மருத்துவர்கள் சோமசுந்தரம், பால்ராம் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மருத்துவர்கள் இருவரின் முன்ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவான மருத்துவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் நான்கு மருத்துவர்கள், ஒரு மருத்துவப் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை முடிவு செய்துள்ளது.
Comments