இந்திய கடற்படைக்குச் சொந்தமான பேருந்து மோதி விபத்து.. இருசக்கர வாகனத்தில் சென்ற நிறைமாதக் கர்ப்பிணி உயிரிழப்பு!
சென்னை மெரினா காமராஜர் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து, மோதிய விபத்தில் சிக்கி நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்தார்.
ஐ.என்.எஸ் அடையார் கடற்படைத் தளத்தில் பணிபுரிந்து வரும் ஆந்திராவை சேர்ந்த சிவாரெட்டி, தனது மனைவி லலிதாவுடன் திருவல்லிக்கேணியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை தனது மனைவியுடன் மெரினா கடற்கரைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
தலைமை செயலகம் பிரதான சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இவர்களின் வாகனத்தின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், பின் இருக்கையில் அமர்ந்து இருந்த கர்ப்பிணி லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய பேருந்தை சிறைபிடித்து அடித்து நொறுக்கினர்.
Comments