புடிச்சான் பாரு எக்ஸ்..! குறும்படம் பெரும் படமாகி வசூல் ரூ.45 கோடிப்பே..! வெற்றியின் ரகசியம் இதுதான்..!

0 14237

கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே படம் 14 நாட்களில் 45 கோடி ரூபாயை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறும்படத்தை பெறும் படமாக்கி குடும்பத்தோடு ரசிக்க செய்த இயக்குனரின் தன்னம்பிக்கை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனாராக இருந்ததில்லை...! சினிமா பின்புலம் சுத்தமாக இல்லை...! பணம் போட்டு பணம் எடுக்க போதிய வசதியும் இல்லை...! அப்படி இருந்தும் அவர் எடுத்த முதல் படமான கோமாளி சூப்பர் ஹிட்..!

அவர் பிரதீப் ரங்க நாதன்....! தான் எடுத்த படம் தான் கோமாளி..! தான் கோமாளி அல்ல என்பதை தனது 2 வது படமான லவ்டுடே படத்தின் மகத்தான வெற்றியின் மூலம் தமிழ் திரை உலகிற்கு உணர்த்தியுள்ளார்.

கல்லூரி காலங்களில் இவர் இயக்கிய குறும்படங்கள் தான் இவருக்கு முகவரி கொடுத்தவை..! யூடீயூப்பில் அதிக பார்வைகளை பெற்று இவருக்கான அங்கீகாரத்தையும் உறுதி செய்தது. அந்தவகையில் 2017 ஆம் ஆண்டு டெல்லி கணேஷை வைத்து, பிரதீப் ரங்க நாதன் இயக்கி நடித்திருந்த அப்பா லாக் என்ற குறும்படத்தை, லவ் டுடே என்ற பெயரில் சத்யராஜூடன் கைகோர்த்து பெறும் படமாக்கி வெற்றி பெற்றிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்

பிரமாண்ட அரங்குகளோ, வெளி நாட்டு பாடல்காட்சிகளோ பிரபலமான நடிகர் பட்டாளமோ இல்லாமல் 5 கோடி ரூபாயில் தயாரான இந்த படத்தை, வயது வந்தோருக்கான படம் போல டிரைலரை வெளியிட்ட பிரதீப் ரங்கனாதனின் தூண்டிலுக்கு சிக்கிய மீன்களாக 90ஸ் மற்றும் 2 k கிட்ஸ் ஒரு பக்கம், செல்போன் குட்டிச்சாத்தானால் அல்லோலப்படும் குடும்பங்கள் மறுபக்கம் என்று 14 நாட்களில் மட்டும் லவ் டுடே படம் 45 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காதலித்த இருவர் தங்கள் செல்போன்களை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொண்டால் என்ன நிகழும் என்பதை கல கலப்பாக சொல்லி இருப்பதால் திரையிடப்பட்ட திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் தொடர்கிறது. இன்னும் இரு வாரங்களுக்கு இந்த படத்தின் வசூல் திரையரங்குகளை நிரப்பும் என்கிறார் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.

பிரபல நடிகர்களுக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்து விட்டு 3 நாட்கள் வசூலோடு காற்று வாங்கும் பிரமாண்ட படங்களுக்கு மத்தியில் மாஸ்.. ஆக்சன்.. பில்டப் இல்லாமல் யதார்த்த வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை காமெடியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லி இருப்பதால் ரசிகர்களை மட்டுமல்ல பிரபல இயக்குனர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments