தமிழகத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசம் வருகிற 21-ஆம் தேதி வரை நீட்டிப்பு...

0 2910

விவசாயிகள், சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய 21-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் காப்பீடு செய்ய இயலாத விவசாயிகளின் நலன் கருதி பயிர் காப்பீடு கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, 27 மாவட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்பித்து 21-ந் தேதி வரை காப்பீடு செய்யலாம் என மத்திய வேளாண் உழவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏதுவாக வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள், வங்கிகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments