அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் பள்ளி வளாகத்தை பெருக்கி சுத்தம் செய்த மாணவ, மாணவிகள்!
தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயகுறிச்சியில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தை பெருக்கி சுத்தம் செய்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தினம்தோறும் சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளி வளாகங்களை பெருக்க வைப்பது, பள்ளி வளாகத்தில் கழிவறை இல்லாததால் 200 மீட்டர் தொலைவில் உள்ள கழிவறைக்கு தண்ணீர் கொண்டு செல்வது போன்ற பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments