இந்திய ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவை உருவாக்க கோரி போராட்டம்.. போலீசார், போராட்டக்காரர்கள் இடையே மோதல்!

0 3557

ஹரியான மாநிலம் குருகிராமில், இந்திய ராணுவத்தில் அஹிர் படைப்பிரிவை உருவாக்கக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கானோர் மறியலில் ஈடுபட முயற்சித்ததை அடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது சிலர் போலீசார் மீது கல் வீசியதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில், ஏராளமானோர் காயமடைந்த நிலையில், சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments