நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் - இந்திய வானிலை மையம்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலில் நாளை தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுமேலும் மேற்கு-வடமேற்கு திசையில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 3 நாட்களுக்குள் நகரக்கூடும் என்பதால், வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
வரும் 21ஆம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், 22ஆம் தேதி வட தமிழக மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Comments