“போலந்து எல்லையில் ஏவுகணை விழுந்ததற்கு ரஷ்யாவே பொறுப்பு” - ஆண்டனி பிளிங்கன்
போலந்து எல்லையில் ஏவுகணை விழுந்த விவகாரத்திற்கு ரஷ்யாவே பொறுப்பு என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
பாங்காக்கில் நடைபெறும் ஆசியா-பசிபிக் மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலந்தின் முதற்கட்ட விசாரணையில் உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணை விழுந்ததற்கு காரணம் என்பதில் முரண்படவில்லை என்றும், தன்னை தற்காத்து கொள்ளும் உரிமை உக்ரைனுக்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.
தற்போது உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவே, இறுதியில் ஏவுகணை விவகாரத்திற்கும் பொறுப்பு என அவர் குறிப்பிட்டார்.
Comments