கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்படாமல் விடப்பட்டிருக்கும் மேம்பாலத்தினை நேரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன்
திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்படாமல் விடப்பட்டிருக்கும் மேம்பாலத்தினை சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆற்றின் குறுக்கே கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மூன்று கோடியே 60 லட்சம் திட்ட மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதுபற்றி தகவல் அறிந்த வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்ஏ அந்த மேம்பாலத்தை நேரில் பார்வையிட்டு முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளை தற்காலிகமாக விரைந்து செய்து முடிக்குமாறு பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
அதன் பேரில் பொதுப்பணி துறையினர் சம்பவ இடத்தில் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் ஜேசிபி எந்திரம் மூலம் தற்காலிக மணல்மேடு அமைத்து அப்பகுதி மக்கள், மாணவர்கள் சென்று வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Comments