ஒயினில் குளித்து ஜப்பான் நாட்டு மது பிரியர்கள் உற்சாகம்..!
பிரான்ஸிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயினில் குளித்து ஜப்பான் நாட்டு மது பிரியர்கள் உற்சாகமடைந்தனர்.
பிரான்ஸின் பெஜோலே பிராந்தியத்தில் விளைவிக்கப்படும் திராட்சையில் தயாராகும் ஒயினில் பாதி ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
டாலருக்கு நிகரான ஜப்பான் யென்னின் விலை வீழ்ச்சியால், ஒயின் விலை 40 சதவீதம் அதிகரித்து ஒரு பாட்டில் சுமார் 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஹக்கோன் நகர மலை ரிசார்ட்டில் உள்ள ஸ்பாவில் ஒயின் குளியலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments