வீராங்கனை பிரியாவின் பெயரில் கால்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்படும் - அண்ணாமலை

0 2665

உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெயரில் கால்பந்தாட்ட போட்டிகளை நடத்த உள்ளதாகவும், 10 வீராங்கனைகள் கால்பந்தாட்ட பயிற்சி பெற பா.ஜ.க. முழு செலவையும் ஏற்கும் என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை வியாசர்பாடியில் பிரியாவின் குடும்பத்தினரை சந்தித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

பின்னர் பேட்டியளித்த அண்ணாமலை, பிரியாவுக்கு பிரதமர் மோடியை பார்க்க வேண்டும் என ஆசை இருந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்ததாகவும், பிரியாவின் பெயர் நிலைத்திருக்கும் வகையில் பா.ஜ.க. நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments