அரசு பேருந்து நடத்துனரின் கறார் செயலை மன்னித்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி..! இருந்தாலும் பணியிடை நீக்கம்

0 5081

புதுக்கோட்டை அன்னவாசல் அருகே இரு கண்களும் பார்வையிழந்த கல்லூரி மாணவனை டிக்கெட் எடுக்கக்கூறி கட்டாயப்படுத்தியதாக அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தன்னை டிக்கெட் எடுக்க கட்டாயப்படுத்திய நடத்துனரை மன்னித்த மாணவனின் மனித நேயம் குறித்து

புதுக்கோட்டை அன்னவாசலை சேர்ந்தவர் முகமது பாசில் . இரு கண்களும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவரான இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் படித்துவரும் நிலையில், தினசரி கல்லூரிக்கு அரசு பேருந்தில் சென்று வருவதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அவர் கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்ப அரசுப் பேருந்தில் ஏறியபோது, நடத்துனர் முருகேசனிடம் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை காண்பித்து இலவச பயணத்துக்கான டிக்கெட் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனை நடத்துனர் ஏற்க மறுத்த நிலையில், அவர் வேறு வழியின்றி பணம் கொடுத்து டிக்கெட் பெற்றதாக சொல்லப்படுகிறது.

சம்பவம் குறித்து அம்மாணவன் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதற்க்கிடையே அந்த நடத்துனரை தான் மன்னித்து விட்டதாகவும் , அவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் தன்னை போல மற்ற மாற்றுத்திறனாளிகளிடம் இப்படி கறாராக நடந்து கொள்ள வேண்டாம் என்றும் அந்த மாணவன் கேட்டுக் கொண்டிருந்தார்

இதையடுத்து மாணவன் விடுத்த கோரிக்கையை ஏற்று, நடத்துனரை வேறு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments